search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சென்னைக்கு குடிநீர்"

    ஏரிகளில் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால் சென்னையில் விரைவில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

    சென்னை:

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரி களாக பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் ஏரிகள் உள்ளன.

    இந்த 4 ஏரிகளிலும் மொத்தம் 11 ஆயிரத்து 257 மில்லியன் கனஅடி தண்ணீர்சேமித்து வைக்கலாம்.

    தற்போது ஏரிகளில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து வெறும் ஆயிரத்து 259 மில்லியன் கனஅடி மட்டுமே தண்ணீர் உள்ளது.

    இது மொத்த கொள்ளளவில் 11 சதவீதம் ஆகும். இந்த தண்ணீரை கொண்டு சென்னையில் 2½ மாதங்களுக்கு மட்டுமே குடிநீர் வினியோகிக்க முடியும்.

    சோழவரம் ஏரி முற்றிலும் வறண்டுவிட்டது. இதன் மொத்த கொள்ளளவு 1081 மில்லியன் கனஅடி, தற்போது 1 மில்லியன் கனஅடி மட்டுமே உள்ளது.

    இதனால் மின் மோட்டார் மூலம் புழல் ஏரிக்கு அனுப்பப்பட்ட தண்ணீரும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நிறுத்தப்பட்டது. தண்ணீர் இல்லாததால் ஏரி முழுவதும் மணல் பரப்பாக காணப்படுகிறது. பூண்டி ஏரியில் 13 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது (மொத்த இருப்பு 3231 மில்லியன் கனஅடி). ஏரியில் நீர்மட்டம் குறைந்ததால் கடந்த 2 மாதத்துக்கு முன்பே சென்னை குடிநீருக்கு தண்ணீர் அனுப்புவது நிறுத்தப்பட்டது.

    மேலும் ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலும் நீர் இருப்பு குறைந்ததால் பூண்டி ஏரிக்கு திறக்கப்படும் கிருஷ்ணா நீர் மார்ச் 26-ந் தேதி முதல் நின்றுவிட்டது. நீர் வரத்து இல்லாததால் பூண்டி ஏரியின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.

    பேபி கால்வாய் மூலம் 12 கனஅடி தண்ணீர் மட்டும் சென்னைக்கு அனுப்பப்படுகிறது. ஏரியில் 8 மில்லியன் கனஅடிக்கு நீர்மட்டம் குறைந்ததால் பேபி கால்வாய் மூலம் தண்ணீர் அனுப்புவதும் சாத்தியப்படாது.

    செம்பரம்பாக்கம் ஏரியில் 476 மில்லியன் கனஅடி நீர் உள்ளது (மொத்த கொள்ளளவு 3645 மில்லியன் கனஅடி). 57 கனஅடி தண்ணீர் குடிநீருக்காக வெளியேற்றப்படுகிறது.

    புழல் ஏரியில் 769 மில்லியன் கனஅடி தண்ணீர் இருக்கிறது. (மொத்த கொள்ளளவு 3300). குடிநீர் தேவைக்காக 103 கனஅடி வெளியேற்றப்படுகிறது.

    தற்போது செம்பரம்பாக்கம், புழல் ஏரியில் மட்டுமே தண்ணீர் உள்ளது. இந்த ஏரிகளிலும் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால் சென்னையில் விரைவில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

    வீராணம் ஏரி மட்டுமே சென்னை மக்களின் நம்பிக்கையாக இருக்கிறது. வீராணம் ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.50 அடியாகும்.

    வீராணம் ஏரியில் இருந்து சென்னை குடிநீருக்கு தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. நேற்று வினாடிக்கு 74 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இன்றும் அதே அளவு 74 கனஅடி தண்ணீர் அனுப்பப்படுகிறது.

    கடந்த ஆண்டு சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்ட போது கல்குவாரி தண்ணீர் மற்றும் காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து நிலத்தடி நீர் எடுத்து வினியோகிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்ப முன்னேற்பாடுகள் நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #VeeranamLake
    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் லால்பேட்டையில் உள்ள வீராணம் ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.50 அடி ஆகும். இந்த ஏரியானது மாவட்டத்தின் முதன்மையான நீர் ஆதாரமாக விளங்குவதோடு சென்னை நகர மக்களின் தாகத்தை தீர்ப்பதில் முக்கிய இடம் பிடித்துள்ளது. இந்த ஏரியில் இருந்து சென்னைக்கு 72 கனஅடி தண்ணீர் அனுப்பப்பட்டு வந்தது. ஆனால் கடந்த 5 மாதங்களாக நீர் வரத்து இல்லாமல் வீராணம் ஏரி வறண்டு காணப்பட்டது. இதனால் கடந்த மார்ச் மாதம் 21-ந் தேதி முதல் சென்னைக்கு குடிநீர் அனுப்புவது நிறுத்தப்பட்டது.

    கடந்த சில வாரங்களுக்கு முன்பு கர்நாடகாவில் இருந்து காவிரி உபரிநீர் தமிழகத்துக்கு திறந்து விடப்பட்டது. அந்த தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்தது. பின்னர் கல்லணைக்கு வந்த தண்ணீர் கீழணைக்கு திறக்கப்பட்டது. அங்கிருந்து வடவாறு வழியாக கடந்த 27-ந் தேதி வீராணம் ஏரிக்கு தண்ணீர் வந்தது. கடந்த 3 நாட்களாக வினாடிக்கு 2,200 கனஅடி தண்ணீர் வீராணம் ஏரிக்கு அனுப்பப்பட்டது. இன்றும் அதே கனஅடி தண்ணீர் வந்தது. இதனால் ஏரியின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

    ஏரியின் நீர்மட்டம் நேற்று 42.45 அடியாக இருந்தது. இன்று அது 43.35 அடியாக உயர்ந்துள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் வீராணம் ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    வீராணம் ஏரியின் கடைசி பகுதியான சேத்தியாத் தோப்பு அருகே பூதங்குடியில் நீரேற்று நிலையம் உள்ளது. இங்கு காவிரி தண்ணீர் வந்தது. இங்கிருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்ப முன்னேற்பாடுகள் நடந்து வருகிறது.


    இந்த நீரேற்று நிலையத்தை சென்னை மெட்ரோ வாட்டர் செயல் இயக்குனர் பிரபுசங்கர், கண்காணிப்பு பொறியாளர் திருநாவுக்கரசு, உதவி பொறியாளர்கள் அருண்குமார், விஷ்வநாதன் உள்ளிட்ட குழுவினர் நேற்று பார்வையிட்டனர். பின்னர் வீராணம் ஏரியின் நீர்வாங்கி நெடுமாடத்தை ஆய்வு செய்தனர். முன்னதாக சோதனை முறையில் வீராணம் ஏரியில் இருந்து தண்ணீரை பப்பிங் செய்து பார்த்தனர்.

    இது குறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, சென்னைக்கு குடிநீர் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சேத்தியாதோப்பு முதல் வடக்குத்து பகுதி வரை உள்ள குடிநீர் குழாயை சுத்தம் செய்யும் பணி வீராணம் ஏரி நீரேற்று நிலையத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த பணி 4 நாட்கள் வரை நடைபெறும். அதன் பின்னர் விரைவில் வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்பப்படும் என்றார். #VeeranamLake
    வீராணம் ஏரியின் கடைசி பகுதியான சேத்தியாதோப்பு நீரேற்று நிலையத்திற்கு காவிரி தண்ணீர் வந்ததையடுத்து, சென்னைக்கு குடிநீர் அனுப்ப முன்னேற்பாடு பணிகள் நடந்து வருகிறது. #VeeranamLake #Cauvery
    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் லால்பேட்டையில் உள்ள வீராணம் ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.50 அடி ஆகும். சென்னை நகர மக்களின் தாகத்தை தீர்ப்பதில் முதன்மையாக விளங்கும் இந்த ஏரியில் இருந்து சென்னைக்கு 72 கனஅடி தண்ணீர் அனுப்பப்படும்.

    நீர் வரத்து இல்லாததால் கடந்த 5 மாதங்களாக வீராணம் ஏரி வறண்டு காணப்பட்டது. இதனால் கடந்த மார்ச் மாதம் 21-ந் தேதி முதல் சென்னைக்கு குடிநீர் அனுப்புவது நிறுத்தப்பட்டது.

    கடந்த சில வாரங்களுக்கு முன்பு கர்நாடகாவில் பெய்த கனமழை காரணமாக காவிரி உபரி நீர் தமிழகத்துக்கு திறந்து விடப்பட்டது. அந்த தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்தது. பின்னர் கல்லணைக்கு வந்த தண்ணீர் கீழணைக்கு திறக்கப்பட்டது. அங்கிருந்து வடவாறு வழியாக கடந்த 27-ந் தேதி வீராணம் ஏரிக்கு தண்ணீர் வந்து சேர்ந்தது. நேற்று 2,200 கனஅடி தண்ணீர் வீராணம் ஏரிக்கு வந்தது. இன்றும் அதே அளவு கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    வீராணம் ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. ஏரியின் நீர்மட்டம் நேற்று 41.55 அடியாக இருந்தது. இன்று அது மேலும் ஒரு அடி உயர்ந்து 42.45 அடியாக அதிகரித்துள்ளது.

    இன்னும் ஓரிரு நாட்களில் வீராணம் ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    வீராணம் ஏரியின் கடைசி பகுதியான சேத்தியாதோப்பில் நீரேற்று நிலையம் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் காவிரி தண்ணீர் வந்தது. இங்கிருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்ப முன்னேற்பாடு பணிகள் நடந்து வருகிறது. சில நாட்களில் இந்த நீரேற்று நிலையத்தில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்பப்படும் என கூறப்படுகிறது. #VeeranamLake #Cauvery

    கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு வினாடிக்கு 2,200 கனஅடி நீர் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதால், அங்கிருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்பி வைக்க முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. #VeeranamLake
    சேத்தியாத்தோப்பு:

    மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு கடந்த 19-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. காவிரி ஆற்றில் கரைபுரண்டு வந்த இந்த தண்ணீர் கல்லணை வழியாக கடந்த 26-ந் தேதி கீழணைக்கு வந்தது. கீழணையின் மொத்த நீர்மட்டமான 9 அடியை வேகமாக எட்டியது.

    இதையடுத்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு வினாடிக்கு 2,200 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. உபரிநீர் கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்டு, வீணாக கடலில் கலக்கிறது.

    கீழணையில் இருந்து திறந்து விடப்பட்ட காவிரிநீர், கடலூர் மாவட்டம் லால்பேட்டையில் உள்ள வீராணம் ஏரியை கடந்த 27-ந் தேதி வந்தடைந்தது. இதனால் வீராணம் ஏரியின் நீர்மட்டம் 32 அடியில் இருந்து படிப்படியாக உயர தொடங்கியது. நேற்று மாலை நிலவரப்படி வீராணம் ஏரியின் நீர்மட்டம் 40.50 அடியாக இருந்தது.

    இதே அளவு தண்ணீர் வந்தால் இன்னும் 4 அல்லது 5 நாட்களுக்குள் வீராணம் ஏரி மொத்த உயரமான 47.50 அடியை எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்பிவைப்பதற்காக சேத்தியாத்தோப்பில் நீரேற்று நிலையம் உள்ளது. இந்த நீரேற்று நிலையத்தை நேற்று முன்தினம் காவிரிநீர் தொட்டது.

    இங்கிருந்து ராட்சத குழாய்கள் மூலம் சென்னைக்கு வினாடிக்கு 76 கனஅடி வீதம் குடிநீர் கொண்டு செல்லப்பட உள்ளது. இதற்காக ராட்சத குழாய்கள், மோட்டார்கள் பராமரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘வீராணம் ஏரி நிரம்பியதும் முதலில் விவசாய பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விடப்படும். இதன் தொடர்ச்சியாக சேத்தியாத்தோப்பில் உள்ள நீரேற்று நிலையத்தில் இருந்து சென்னைக்கு வினாடிக்கு 76 கனஅடி வீதம் குடிநீர் அனுப்பி வைக்கப்படும். இதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது’ என்றார்.  #VeeranamLake
    ×